திருச்சி ,தில்லை நகர் 1-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் நிர்மல் (23). இவர் இன்ஜினியர். சென்னையில் பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் சுமதி. கனடா நாட்டில் சகோதரியுடன் உள்ளார். இவரது தந்தை சீனிவாசன் (59.) இவர் புத்தூர் பாரதி நகரில் உள்ள வீட்டில் இருந்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். உடனே அவரை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரி போலீஸ் எஸ்ஐ காமராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.