Skip to content
Home » மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

மணல் எடுக்க நிபந்தனை என்ன? அரசாணை தாக்கல் செய்ய ஐகோா்ட் உத்தரவு

வேலூர் மாவட்டம் பாலாற்றில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளப்படுவதாக சமூக ஆர்வலர் கஜராஜ் என்பவர் ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், மணல் குவாரிகள் மணல் அள்ளுவதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அரசாணையானது கண்டிப்புடன் அமல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் மணல் குவாரிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கையையும், மணல் அள்ளுவதற்கு நிபந்தனைகள் விதித்த அரசாணையையும் சமர்ப்பிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *