தி.மு.கழக இளைஞரணி செயலாளரும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று திருச்சி வந்தார். விமான நிலையத்தில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
வரவேற்பு முடிந்ததும் கலைஞர் அறிவாலயம் வந்த அமைச்சர் உதயநிதி, அண்ணா மற்றும் கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ,போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மற்றும் மாவட்ட செயலாளர்கள் காடுவெட்டி தியாகராஜன், வைரமணி, மேயர் அன்பழகன் மற்றுமி் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேர் காணல் நடத்தினார்.
மாவட்ட ,மாநகர அமைப்பு செயலாளர் மற்றும் துணை அமைப்பு செயலாளர் , நகர, பேரூராட்சி கழக நிர்வாகிகளுக்கான நேர்காணல் நடைபெற்றது. இந்த நேர்காணலில் திருச்சி மேற்கு, தெற்கு, வடக்கு மற்றும் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த 280 பேர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இவர்களின் கல்வித்தகுதி, கட்சிப்பணி போன்றவற்றை விசாரித்து அவர்களை அமைச்சர் உதயநிதி தேர்வு செய்தார்.