சென்னையில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய நபர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் அபராதத்தொகை வசூலிக்கப்படுகிறது. அந்தவகையில் கடந்த 7 வாரங்களில் 5,738 பேர்களிடம் ரூ.5.94 கோடி அபராதத்தொகையாக வசூலிக்கப்பட்டுள்ளது. அபராதத்தொகை விதித்து 14 நாட்களுக்குள் அதை செலுத்தாவிட்டால் அவர்களது வாகனம் அல்லது அசையும் சொத்துக்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை கோர்ட்டு மூலம் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags:போதையில் டிரைவிங்