Skip to content
Home » குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

குறவன் – குறத்தி ஆட்டத்திற்கு தமிழக அரசு தடை..

இது குறித்து, சுற்றுலா, பண்பாடு, அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்தரமோகன் பிறப்பித்துள்ள உத்தரவு… தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞா்கள் நலவாரியத்தில் உறுப்பினா்களாகப் பதிவு செய்வதற்காக அடையாளம் காணப்பட்ட 100 கலைகள் பட்டியலில் 40-வது இடத்தில் இடம்பெற்றுள்ள குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலைப்பிரிவை நீக்கம் செய்து அரசு உத்தரவிடுகிறது. மேலும், கரகாட்டம் என்ற பெயரிலும் ஆடல் – பாடல் நிகழ்ச்சிகளில், எந்தவொரு கலை நிகழ்ச்சிகளிலும் குறவன் – குறத்தி ஆட்டம் என்ற கலை நிகழ்ச்சி நடத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. குறவன், குறத்தி ஆட்டம் எந்த ஒரு கலை நிகழ்ச்சியிலும் நடைபெறவில்லை என்பதை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் உறுதிப்படுத்த வேண்டும்’ என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *