மைசூரைச் சேர்ந்தவர் தட்சிணா மூர்த்தி கிருஷ்ணகுமார். இவர், பன் னாட்டு நிறுவனத்தில் உயர்ப்பதவி வகித்து வந்தார். இவரது தாய் சூடரத் னாம்மாள்(72). 2015ம் ஆண்டு கிருஷ் ணகுமாரின் தந்தை திடீரென்று கால மானார். தாய்க்கு பிடித்தமான கோயில்களை சுற்றிக்காட்ட, பிரம்மச் சாரியான கிருஷ்ணகுமார் முடிவு செய் தார். தனது வேலையை விட்டுவிலகினார். கர்நாடகாவில் உள்ள சில கோயில் களுக்கு தாயை அழைத்துச் சென்றார். தந்தையின் ஸ்கூட்டரில் ஹாசனில் உள்ள பேலுார் மற்றும் அலபேடு போன்ற இடங்களுக்கு அழைத்துச் சென்றார். இவ்வாறு அவரது மாத்ரு சேவா சங்கல்ப யாத்திரை என்ற அவரது ஆன்மிக யாத்திரை துவங்கியது. பின்னர் அந்த ஆன்மிகப்
பயணம் விஸ்வரூபம் எடுத்தது. அதே ஸ்கூட் டரில் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், மத்தியப்பிரதேசம் உட்பட்ட மாநிலங்கள் மட்டுமின்றி, நேபாளம், பூட்டான், வங்கதேசம் மற்றும் மியான் மர் நாடுகளுக்கும் சென்று முக்கிய புனிதத் தலங்களை தரிசித்துவிட்டு, நேற்று திருச்சி வந்தனர். ஸ்ரீரங்கம் மற்றும் திருவானைக்காவல் கோயில் களில் தரிசனம் செய்தனர்.இவ்வகையில் இதுவரை ஆயி ரத்து 586 கி.மீட்டர் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளி லும் உள்ள புனிதத்தலங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளனர்.