திருச்சியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரும் 28ம் தேதி வருகிறார். இவ்விழாவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொள்கின்றனர். இதனையடுத்து நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இடம் தேர்வுக்காக திருச்சி அண்ணா விளையாட்டு மைதானத்தை ஆய்வு மேற்கொண்டார். உடன் திருச்சி கலெக்டர் மா.பிரதீப் குமார், மேயர் மு.அன்பழகன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.