தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இந்த தேர்வு அடுத்த மாதம் 3-ந்தேதி வரை நடக்கிறது. இந்த தேர்வை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10 ஆயிரத்து 350 மாணவர்கள், 10 ஆயிரத்து 218 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 568 பேர் எழுத இருந்தனர். இதற்காக 74 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது.
மேலும் தனித்தேர்வர்கள் தேர்வு எழுதவும் 4 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று நடைபெற்ற 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 2,831 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். 1,156 மாணவர்களும், 1,675 மாணவிகளும் இந்த தேர்வில் பங்கேற்கவில்லை என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஏன் இத்தனை பேர் தேர்வு எழுதவரவில்லை என்பதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
நாளை தொடங்கவுள்ள பிளஸ்-1 தேர்வை 9 ஆயிரத்து 200 மாணவர்கள், 9 ஆயிரத்து 64 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 264 பேர் எழுத உள்ளனர்.