Skip to content
Home » பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

பட்டாகத்தி தமன்னா……போலீஸ் தேடுதல் வேட்டை…. நான் புள்ளதாச்சி என கதறல்

  • by Authour

கோவை மாநகரில் கடந்த மாதம் இருவேறு கொலை சம்பவங்கள் நிகழ்ந்தது.கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் இச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் கோவை மாநகர போலீசார் கைது செய்தனர். கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கோவை மாநகரில் ரவுடித்தனங்களில் ஈடுபடும் நபர்கள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக் கொண்டு வீடியோ பதிவிடும் நபர்கள் குறித்தும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் கோவை மாநகரில் ரவுடியிசத்தில் ஈடுபடுவோர்  மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆயுதங்களைக்காட்டி  மக்களை மிரட்டுகின்ற தொனியில் வீடியோ பதிவேற்றம் செய்த சுமார் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கோவையை சேர்ந்த தமன்னா வினோதினி என்ற இளம்பெண் பயங்கர பட்டா கத்தி உள்ளிட்ட  ஆயுதங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. இது சம்மந்தமாக கோவை மாநகர போலீசார் விசாரணை நடத்தி அந்த இளம்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் தமன்னா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பட்டா கத்தியுடன் இருக்கும் வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டதாகவும் தற்போது இது மாதிரியான வீடியோக்கள் எதுவும் வெளியிடவில்லை. ஏற்கனவே கஞ்சா வழக்கில் உள்ளே சென்று வந்துள்ளேன். மேலும் தான் திருமணமாகி ஆறு மாத கர்ப்பிணியாக கணவருடன் வாழ்ந்து வருகிறேன். தனது நண்பர்களை காவல்துறையினர் பிடித்து வைத்து உள்ளனர். நான்  வந்தால் தான்  அவர்களை விடுவேன் என விசாரணை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *