தமிழ்நாடு, புதுவையில் இன்று பிளஸ்2 தேர்வு தொடங்கியது. காலை 10 மணிக்கு தொடங்கிய தேர்வு மதியம் 1.15 மணி வரை நடந்தது. இந்த தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவ, மாணவிகளிடம் தேர்வு எப்படி இருந்தது என்று கேட்டபோது பெரும்பாலான மாணவ, மாணவிகள் தமிழ்த்தேர்வு எளிதாக இருந்தது. படித்த பாடங்களில் இருந்து தான் கேள்விகள் வந்திருந்தது என்றனர்.
ஒரு சில மாணவர்கள், ஒன் வேர்டு கேள்விகள் சற்று கடினமாக இருந்தது. அந்த பகுதியில் எதிர்பார்க்காத கேள்விகள் வந்திருந்தது. மற்றபடி பெரிய கேள்விகள் எளிதாகவே இருந்தது. எதிர்பார்த்தபடி அந்த கேள்விகள் இருந்ததால் நன்றாக எழுதினோம் என்றனர்.