உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் ஜூன் மாதம் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் ஆட ஏற்கனவே ஆஸ்திரேலியா தகுதி பெற்றுவிட்டது. அந்த ணியுடன் மோதும் அணி இந்தியாவா, இலங்கையா என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
தற்போது ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் டெ1்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. 4வது போட்டியில் இந்தியா வென்றால் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு இந்தியா தகுதி பெற்று விடும். அல்லது நியூசிலாந்தில் நடைபெறும் நியூசி-இலங்கை டெஸ்டில் இலங்கை தோற்றாலும் இந்தியா உலக கோப்பை டெஸ்ட் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் இன்று முடிவடைந்த நியூசி-இலங்கை போட்டியில் நியூசி வெற்றி பெற்றதால், இந்தியா உலககோப்பை சாம்பியன்ஹிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது.