தமிழ்நாடு, புதுவையில் இன்று காலை 10 மணிக்க +2 பொதுதேர்வு தொடங்கியது. முதல் நாளான இன்று மொழித்தேர்வு நடந்தது. மதியம் 1.15 மணி வரை தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை இந்த தேர்வு நடக்கிறது. தமிழகம் முழுவதும் 3225 மையங்கள் , 8 லட்சத்து 36ஆயிரத்த்து 593 பேர் எழுதுகிறார்கள். இவர்களில்4 லட்சத்து 3ஆயிரத்து 156 பேர் மாணவர்கள், 4 லட்சத்து 33 ஆயிரத்து 436 பேர் மாணவிகள், ஒருவர் மூன்றாம் பாலினத்தவர்.
திருச்சி மாவட்டத்தில் +2 மற்றும் +1 பொதுத் தேர்வினை 260 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும்
தனித்தேர்வர்கள் 133மையங்களில் தேர்வெழுதுகிறார்கள். +2 தேர்வை 16,802 மாணவர்களும், 17,590 மாணவிகளும்
என மொத்தம் 34,392 மாணவ மாணவியர் தேர்வு எழுதுகிறார்கள். அனைத்து தேர்வு மையங்களிலும் போதுமான அளவு இருக்கை வசதி, குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தேர்வு
மையங்களுக்கான மின்சார வசதி மற்றும் போக்குவரத்து வசதியும் சம்பந்தப்பட்ட துறை மூலமாக மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
தேர்வு பணியில் 133தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 133துறை அலுவலர்கள், 20வினாத்தாள் கட்டுப்பாளர்கள், 30வழித்தட அலுவலர்கள், 265 நிலையான, பறக்கும் படை உறுப்பினர்கள், 2407 தேர்வறை
கண்காணிப்பாளர்கள் 229 சொல்வதை எழுதுபவர்கள், மற்றும் 275 அலுவலகப் பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 9முதல் மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் தேர்வு எழுதுவதற்காக தேர்வு மையங்களுக்கு வந்தனர். ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் ஒருமுறை திருப்புதல் செய்துகொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் அவர்களுக்கு மேலும் ஊக்கப்படுத்தினர்.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி சிந்தாமணியில் உள்ள இ.ஆர் மேல்நிலைப் பள்ளிக்கு சென்று தேர்வு நடக்கும் மையங்கள், கழிவறைகள், தேர்வு எழுதும் வகுப்பறைகளை பார்வையிட்டு மாணவர்கள் எந்தவித தயக்கமுமின்றி தேர்வு எழுத உற்சாகப்படுத்தியதுடன் வாழ்த்தும் தெரிவித்தார்.
பிளஸ்1 தேர்வு நாளை துவங்கி அடுத்த மாதம் 5வரை நடைபெற உள்ளது. திருச்சி மாவட்டத்தில் 1பொதுத்தேர்வினை 14,088 மாணவர்களும், 16,678 மாணவிகளும் என மொத்தம் 30766 மாணவ / மாணவியர்களும் பொதுத் தேர்வினை
எழுதவுள்ளனர்.