திருச்சி மணப்பாறை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்நத 15வயது சிறுமியை புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே உள்ள லஞ்சமேடு பகுதியை சேர்ந்த நிஷாந்தன் (24) என்பவர் ஆசை வார்த்தை கூறி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். இதில் அச்சிறுமி கர்ப்பமடைந்துள்ளார். இதனைதொடர்ந்து சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மணப்பாறை போலீசார் நிஷாந்தன் மற்றும் அவரது தாய் ராணி, தந்தை அழகர்ராஜா உள்ளிட்டோர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.