மதுரை விமான நிலையத்தில் சிலர் தன்னை தாக்கியதாக அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் அளித்த புகாரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மதுரை விமான நிலையத்தில் உள்ளே பஸ்சில் எடப்பாடி பழனிசாமி சென்ற போது அதில் பயணம் செய்த அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவரை அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்தார். அதனை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போன் பதிவை தடுத்தார். சமூக வலைதளத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்ததாகவும் விமானநிலையத்தில் அத்துமீறி செயல்பட்டதாகவும் அமமுக நிர்வாகி ராஜேஷ்வரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த ராஜேஷ்வரனை சிலர் இழுத்து சென்று தாக்கினர். இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tags:எடப்பாடி பழனிச்சாமி