தமிழக அரசின் நிதி உதவியுடன் தஞ்சையில் சாலையோர மன நோயாளிகளுக்கான காப்பகமாக அன்பாலயம் மன நல காப்பகம் இயங்கி வருகிறது.. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் மீட்கப்பட்ட மீனாட்சி மற்றும் கடந்த ஜனவரி மாதத்தில் மீட்கப்பட்ட யோகேஸ்வரி ஆகிய இருவருக்கும் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து சிகிச்சையின் பலனாக அவர்கள் இருவரும் குணமடைந்தனர். பின்னர் அவர்களின் முகவரி கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுவாமிநாதன், அன்பாலயம் செயலாளர் ஜெனோவா அரசி, மேனேஜர் விஜய்குமார், சமூக பணியாளர்கள் கமலி, மரிய ஜெர்சில்லா, வல்லம் பேரூராட்சி மேற்பார்வையாளர் வெங்கடேசன் மற்றும் தனபால் ஆகியோர் முன்னிலையில் மீனாட்சி, யோகேஸ்வரி ஆகிய இருவரும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.