தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார். இதில் பரோடா வங்கியின் சென்னை மண்டல பொது மேலாளர் சரவணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் இந்த மாநாட்டில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் வெங்கடாச்சலம், அகில இந்திய பரோடா வங்கி ஊழியர் சங்கத்தின் செயலாளர் ஜனக் ராவல் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.