Skip to content
Home » கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

கோவையில் பட்டப்பகலில் ஐ.டி ஊழியர் வீட்டில் புகுந்து கொள்ளை….

  • by Senthil

கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்த ஐ.டி ஊழியர் டோமினிக் இன்ஃபான்ட் ராஜ். இரவு வேலை முடித்து விட்டு வீட்டின் உட்புற பூட்டாமல் உறங்கினார். அப்போது அங்கு முகவரி கேட்பது போல வந்த மர்ம நபர், அக்கம் பக்கம் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையில் ஈடுபட முடிவு செய்தார். அதனடிப்படைதில் வீடுகளில் உள்ளவர்களிடம் விலாசம் கேட்ட அந்த மர்ம நபர், ஐ.டி ஊழியரான டோமினிக் வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் இரவு பணி முடித்த நிலையில், அயர்ந்து உறங்கிக் கொண்டு இருந்தார். நைசாக உள்ளே சென்று வீட்டில் இருந்த மின்னணு சாதனங்களான ஆப்பிள் மேக் மடிக்கணினி, டெல் அடாப்டர், உயர் ரக ஹெட்செட், வையர்லஸ் நெக் பேண்ட்,

ஸ்மார்ட் ஃபோன், ஸ்மார்ட் வாட்ச், பேக் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை கொள்ளை அடித்து ஓட்டம் பிடித்தார்.
அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவில் ஏறிய அந்த மர்ம நபர், அவசரமாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்று பள்ளி செல்லும் வாகனம் என்பதால் மருத்துவமனை செல்ல முடியாது என்று தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர் இறக்கி விட்டார். அப்போது எங்கு செல்வதென்று தெரியாமல் மர்ம நபர் தடுமாறும் காட்சி சி.சி.டி.வி யில் பதிவாகி உள்ளது. லேப்டாப் பேக்குடன் அந்த நபர் ஓடும் காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் ஐ.டி ஊழியர் தந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிந்து, கொள்ளையில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!