பெரம்பலூர் அருகே உள்ள நொச்சியம் கிராமம் கிழக்கு தெருவில் வசிக்கும் பாலமுருகன் என்பவரின் மகன் ஆதித்தயா என்பவர் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.இவர் இன்று காலை 9:15 மணியளவில் பள்ளியில் உள்ள கழிப்பறையில் சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது மாணவன் சென்ற பாதையில் பாம்பு ஒன்று படுத்திருந்துள்ளது. அதனை கண்டு பயந்து கீழே விழுந்ததாகவும் அப்போது ஆதித்தயாவின் இடது கையில் பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாணவன் ஆதித்தயா பள்ளி அருகே உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.மாணவனை பாம்பு கடித்தது தொடர்பாக பெரம்பலூர் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.