Skip to content
Home » திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி அருகே பள்ளியில் மாணவர்கள் மோதல்… 10ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி மாவட்டம் முசிறி  அடுத்த தொட்டியம் பால சமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில்  இன்று காலை 10ம் வகுப்பு  மாணவர்கள் பள்ளி வளாகத்தில் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது  மாணவர்கள் சிலர் ஒருவர் மீது ஒருவர்  சிறிய கற்களை  தூக்கி எறிந்து விளையாடிக்கொண்டிருந்தனர்.

இந்த விளையாட்டு விபரீதமாக மாறி பின்னர் ஒருவரையொருவர் தாக்கினர். இதில் சில மாணவர்கள் ஒன்று சேர்ந்து 10ம் வகுப்பு படித்து வந்த மவுலீஸ்வரன் என்ற மாணவனை கடுமையாக தாக்கி படிக்கட்டில் இருந்து தள்ளிவிட்டனர்.  இதில் படுகாயமடைந்த மாணவன் மவுலீஸ்வரனை உடனடியாக நாமக்கல்  அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி  மாணவன் மவுலீஸ்வரன் இறந்தான். இதுபற்றிய தகவல் அறிந்த மாணவன் மவுலீஸ்வரனின் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள்  பள்ளி முன் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதனால் திருச்சி-

நாமக்கல் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் முசிறி டிஎஸ்பி யாஸ்மின் மற்றும் தொட்டியம், காட்டுப்புத்தூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். கல்வி அதிகாரிகளும் விரைந்து வந்து விசாரணை நடததி வருகிறார்கள். இது தொடர்பாக 2 மாணவர்களை பிடித்து  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தொட்டியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உடனடியாக பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.

இறந்துபோன மாணவன் மவுலீஸ்வரன் தோளூர்பட்டியை சேர்ந்த  கட்டிட தொழிலாளி கோபி என்பவரது மகன் ஆவார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *