இந்தியா முழுவதும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவி வருகிறது. தமிழகத்திலும் இந்த வகையான காய்ச்சல் இருப்பதால் இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடத்தப்படுகிறது. இந்த காய்ச்சல் கண்டவர்களுக்கு சளி தொந்தரவு மற்றும் இருமல், தொண்டை வலி, மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இன்ப்ளூயன்சா எச்3என்3 வகை காய்ச்சலுக்கு இந்தியாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். இன்னொருவர் அரியானா மாநிலத்தை சேர்ந்தவர். இந்த தகவலை மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இது தவிர எச்1என்1 வகை பன்றிக்காய்ச்சல் 90 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் மருத்துவ சிகிச்சையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.