சென்னை அடுத்த திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள தங்கம் விடுதியில் வேலைபார்த்த சோனு என்ற வடமாநில இளைஞர் மது போதையில் அதிக இசை சத்தத்துடன் ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளார். அதிக இசை சத்தத்தால் விடுதியில் உள்ள மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இசை சத்தத்தை குறைக்கும்படி வடமாநில இளைஞர் சோனுவிடம் விடுதி பொறுப்பாளர் கதிர்வேல் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த வடமாநில இளைஞர் சோனு விடுதி பொறுப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில் காய்கறி வெட்டும் கத்தியை எடுத்து சோனு விடுதி பொறுப்பாளர் கதிர்வேலின் மார்பில் குத்தியுள்ளார். பின்னர், தன் கையையும் சோனு அறுத்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.