திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஏழூர்பட்டி, மாராட்சி பட்டி, குண்டுமணி பட்டி, அழியாபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ விநாயகர், மாரியம்மன், ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர், ஸ்ரீ இளங்காளி பிடாரி அம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி ஆகிய நான்கு திருக்கோயில்கள் கும்பாபிஷேக விழா நான்கு கோயில்களுக்கும் ஒரே நாளில் நடைபெற்றது.
கோவில்களின் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை அப்பகுதி பக்தர்களால் புனித நீர் காவிரி ஆற்றில் இருந்து எடுத்துவரப்பட்டு கோவில்களின் முன்பு அமைக்கப்பட்டுடிருந்த யாகசாலையில் வைத்து ஸ்ரீ விநாயகர் வழிபாடு, புண்ணியாஜனம், மகாலட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட பல்வேறு யாகா வேள்விகள் நடத்தி யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க கடகம் புறப்பாடு நடைபெற்று ,
கோவில்களில் உள்ள மூலஸ்தான கோபுரத்தில் அமைக்கப்பட்டிருந்த கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தனர். இந்த விழாவில் முசிறி எம்எல்ஏவும் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளருமான காடுவெட்டி ந. தியாகராஜன் முன்னிலை வகித்து கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார்.
விழாவில் ஏழூர்ப்பட்டி மாராச்சிபட்டி குண்டுமணிபட்டி அழியாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமபகுதியிலிருந்து 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.இந்த விழாவில் பங்கேற்ற அனைத்து பக்தர்களுக்கும் அருள்ட்பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மணியக்காரர்கள், தர்மகர்த்தா, திருக்கோவில் திருப்பணி உபயதாரர்கள், விழா கமிட்டியினர்கள் மற்றும் ஏழூர்ப்பட்டி மாராச்சிப்பட்டி குண்டுமணிபட்டி அழியாபுரம் ஊர் பொதுமக்கள் முக்கியஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.