அதிமுக ஓபிஎஸ் அணியின் கோவை மாநகர் மாவட்ட செயலாளராக இருந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ. செல்வராஜ். இவர் கடந்த 3ம் தேதி அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று சென்னை அண்ணா அறிவாலயம் வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பொன்னாடை அணிவித்து செல்வராஜ் திமுகவில் இணைந்தார். அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.
அதைத்தொடர்ந்து கோவை செல்வராஜ் அளித்த பேட்டி: நான்கரை ஆண்டுகால எடப்பாடி ஆட்சியில் தமிழகம் சீரழிந்து விட்டது. மு.க.ஸ்டலின் தான் சமூக நீதி பாதுகாவலர். அவரது ஆட்சியில் தான் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் வாழ்வில் ஓளி ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இலவசமாக பஸ்களில் பெண்கள் பயணம் செய்வதன் மூலம் பெண்கள் வருமானம் மிச்சமாகிறது. அதிமுக கட்சி தற்போது கம்பெனியாகிவிட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.