புதுக்கோட்டை ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியில் இன்று (09.03.2023) நடைபெற்ற “மாபெரும் தமிழ்க் கனவு”தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சியில், கேள்வி-பதில் நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு சான்றிதழ் மற்றும் பாராட்டு கேடயங்களை வழங்கினார்.
பேராசிரியர் கி.பார்த்திபராஜா “கலைகள் போற்றிய தமிழ்நாடு” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினார். உடன் பேராசிரியர் அருணன் , மாவட்ட வருவாய் அலுவலர் மா.செல்வி, கற்பக விநாயகா கல்வி அறக்கட்டளையின் அறங்காவலர் முனைவர்.கவிதா சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.