Skip to content

மயிலாடுதுறையில் 4 ஜோடிகளுக்கு இலவச திருமணம்…..

  • by Authour

மயிலாடுதுறை அருகே திருமணஞ்சேரியில் திருமணம் வரம் தரும் உத்வாகநாதர் சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை சார்பாக தமிழ்நாடு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி நான்கு ஜோடிகளுக்கு
இலவச திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. ஒவ்வொரு ஜோடிக்கும் தலா ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள

திருமாங்கல்யம், ஆடைகள், முகூர்த்த மாலைகள், சீர்வரிசையை சீதனமாக அறநிலையத்துறை அதிகாரிகள் வழங்கினர். சட்டமன்ற உறுப்பினர்கள் மயிலாடுதுறை ராஜகுமார், சீர்காழி பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு சீர்வரிசை பொருள்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *