முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று (வியாழக்கிழமை) மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். தமிழக சட்டசபையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் சூழ்நிலையில் அமைச்சரவை கூடுகிறது. இந்த பட்ஜெட்டில் முக்கிய திட்டங்கள் இடம் பெறுகின்றன. அதில், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் முன்னோடி திட்டமும் இடம் பெறவுள்ளது. பொது பட்ஜெட்டில் இடம் பெறும் திட்டங்கள், அவற்றுக்கு ஒதுக்கப்படும் நிதி பற்றிய ஆலோசனையை அமைச்சரவை மேற்கொள்ள உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் திட்டங்கள் மற்றும் அதற்கான நிதி ஆகிய அம்சங்களுக்கு இந்த அமைச்சரவை ஒப்புதல் அளிக்கும்.
அடுத்ததாக ஆன்லைன் சூதாட்ட மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.