அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றியம்,
பிள்ளைபாளையம் ஊராட்சி, கீழசெங்கல்மேடு ஆதிதிராவிடர் காலணியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி (2022-23) மூலம் ரூபாய் 6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கி வைத்தல், புதிய கூடுதல் பள்ளி கட்டிடங்கள்(2022-23) திட்டத்தின்கீழ், முத்துசேர்வாமடம் ஊராட்சி, சுண்டிப்பள்ளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் புதிய 3 வகுப்பறை கட்டிடம் ரூபாய் 40.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டும் பணி,
உட்கோட்டை ஊராட்சி, வடக்கு ஆயுதகளம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், புதிய 2 வகுப்பறை கட்டிடம் ரூபாய் 28.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுதல், ஆகிய பணிகளை சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகானந்தம் (வட்டார ஊராட்சி),முருகன் (கிராம ஊராட்சி),ஒன்றிய பொறியாளர் குமார்,ஒன்றிய இளநிலை பொறியாளர் நடராஜன், வட்டார கல்வி அலுவலர் ராசாத்தி,தலைமை
ஆசிரியர் இந்திரா (ஆயுதகளம்), ஜெயங்கொண்டம் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் இரா.மணிமாறன் , ஒன்றிய குழு உறுப்பினர் சுப்பிரமணியன்,பிரதிவிராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் செல்வம் (பிள்ளைபாளையம்), பாரதிரமேஷ் (முத்துசேர்வாமடம்),மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ராமராஜன்,மாவட்ட பொருளாளர் இராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலமுருகன்,கிளை செயலாளர்கள்,மற்றும் கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.