தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை, தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து விசைத்தறி சங்கங்களின் சார்பில் கூட்டமைப்பின் செயலாளர் இரா.வேலுசாமி, ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் சந்தித்தனர். மேலும் விசைத்தறி நெசவாளர்களுக்கான இலவச மின்சாரத்தை 1,000 யூனிட்டாக உயர்த்தி வழங்கியமைக்காகவும், விசைத்தறி நெசவாளர்களுக்கான மின் கட்டணத்தை குறைத்தமைக்காகவும் நன்றி தெரிவித்தனர். வரும் 11.3.2023 அன்று கோயம்புத்தூர் மாவட்டம், கருமத்தம்பட்டியில் நடைபெறவுள்ள பாராட்டு விழாவிற்கு வருகை தருமாறு அழைப்பு விடுத்தனர். முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. உடன் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளார்.