திருச்சி வயலூர் சாலை குமரன் நகர் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர் ஸ்வேதா லட்சுமி(20) என்பவர் இன்று மாலை பணியிலிருந்த போது மருத்துவமனையின் மொட்டை மாடிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். மருத்துவமனையில் இருந்தவர்கள் அவரை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.