கடந்த, 2004 -2009 காலகட்டத்தில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரெயில்வே மந்திரியாக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, பீகாரை சேர்ந்த சிலருக்கு, ரெயில்வேயில் வேலை வாங்கித் தருவதற்காக நிலத்தை லஞ்சமாக பெற்று மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், பீகார் முன்னாள் முதல்-மந்திரி லாலு பிரசாத் யாதவின் மனைவி ரப்ரி தேவி மற்றும் அவரது பிள்ளைகளிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று (மார்ச் 6) விசாரணை நடத்தினர். இந்த நிலையில் இன்றும் லாலு பிரசாத் யாதவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். லாலு பிரசாத் யாதவ் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து மருத்துவரின் கண்காணிப்பில் இருக்கிறார். அப்படியிருக்கும்போதும் சிபிஐ அதிகாரிகள் அவருக்கு விசாரணை என்ற பெயரில் டார்ச்சர் கொடுத்து வருகிறார்கள் என அவரரு ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்.