மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி, கோடை கால மின் தேவையை கையாள்வது குறித்து, இன்று சென்னையில் உள்ள , தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை
அலுவலகத்தில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் தலைமை பொறியாளர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டு, கோடை காலத்தை சமாளிக்க அதிகமான மின்சாரம் தேவைப்படும். அதை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்வது குறித்தும், தட்டுப்பாடு இன்றி மின்சாரம் வழங்குவது குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.