பாஜகவின் தமிழ்நாடு தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பின்னர், அந்த க்சியில் இருந்து பலர் விலகி வருகிறார்கள். அவர்கள் அண்ணாமலை மீது சரமாரியாக குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்கள். இந்த நிலையில் 2தினங்களுக்கு முன் பாஜக மாநில தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவராக இருந்த நிர்மல் குமார், அந்த கட்சியில் இருந்து விலகி, அதிமுகவில் இணைந்தார்.
நேற்று பாஜக தகவல் தொடர்பு அணி செயலாளராக இருந்த திலிப் கண்ணன் பாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் திலிப் கண்ணன் இன்று அதிமுகவில் இணைந்துள்ளார்.
சென்னை ,கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து அதிமுகவில் அவர் இணைந்தார். அவருடன் மேலும் பலர் அதிமுகவில் இணைந்தனர்.