Skip to content
Home » அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

அறந்தாங்கி அருகே புதிய ரேஷன்கடை….. அமைச்சர் மெய்யநாதன் திறந்தார்

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வல்லத்திராக்கோடம்டையில், மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடும்பத்தினரிடம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார். உடன் மாவட்ட கலெக்டர்(பொ) மா.செல்வி , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

 

புதுகை மாவட்டம், அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், சுனையக்காடு ஊராட்சி, கரம்பகாடு கிராமத்தில்,

பகுதிநேர நியாயவிலைக் கடையினை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்.  அதைத்தொடர்ந்து  குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப்பொருட்களை வழங்கினார்.  மாவட்ட கலெக்டர்(பொறுப்பு) செல்வி , கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத் , உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!