தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுகிறார்கள் என பா.ஜ.க நிர்வாகிகள் சிலர் போலி வீடியோ தயாரித்து வெளியிட்டு தமிழ் நாட்டில் கலவரம், குழப்பத்தை ஏற்படுத்தவும், குறிப்பாக திமுக ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் சதி திட்டம் தீட்டினர். சரியான நேரத்தில் தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கலவரம் ஏற்படுத்த சதி திட்டம் தீட்டிய பாஜகவின் முகத்திரை கிழிக்கப்பட்டு விட்டது. இதனால் பெரிய அளவில் பிரச்னைகள் இன்றி சமூகமாக பிரச்னைகள் முடிக்கப்பட்டது.
இந்த நிலையில் போலி வீடியோ வெளியிட்டது தொடர்பாக உ.பி., ஜார்கண்டை சேர்ந்த பல பாஜ நிர்வாகிகள் மீது தமிழக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று ஜார்கண்டை சேர்ந்த மனோஜ் யாதவ் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி என்ற இடத்தில் பதுங்கி இருந்தார். இவரும் போலி வீடியோ வெளியிட்டவர்களில் ஒருவர் ஆவார்.
இவருடன் தொடர்பில் உள்ள மேலும் 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.