தருமபுரி அருகே சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி 3 யானைகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து 3 யானைகள் மரணத்துக்கு காரணமான விவசாயி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார்.
தருமபுரி அருகே மாரண்ட அள்ளி பகுதியில் இன்று அதிகாலை காலை 3 யானைகள் மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்திருந்தன. இது தொடர்பாக பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர் சட்டவிரோதமாக மின்சாரம் எடுத்து விவசாய நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்திருந்தார் இந்த மின்வேலியில் சிக்கிதான் 3 யானைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இதனால் முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.