Skip to content
Home » நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

நம்பிக்கையுடன் வரும் மக்களுக்காக பணியாற்றுங்கள்….மதுரை கள ஆய்வில் முதல்வர் பேச்சு

கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மதுரையில் இன்று 2-வது நாளாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் முதலமைச்சர் மு.கஸ்டாலின் பேசியதாவது: * தென் மாவட்டங்களை பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் மேம்படுத்த வேண்டும். * மக்கள் கோரும் சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்க வேண்டும். * மக்கள் பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். * பெரும் நம்பிக்கையுடன் அதிகாரிகளை மக்கள் அணுகுகிறார்கள். மக்கள் கொடுக்கும் மனுக்கள் வெறும் காகிதங்கள் அல்ல. * மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், குழந்தைகள் ஆகியோரின் தேவைகளை அறிந்து செயல்பட வேண்டும். * மாவட்டங்களுக்கு ஏற்ப சிறப்பு தேவைகளை நிறைவேற்றி தர வேண்டும். * மாவட்டத்திற்கு உரிய தனிப்பட்ட சிறப்பு தேவைகளை உணர்த்த திட்டங்களை வகுக்க வேண்டும். * ஆட்சியர்களின் உத்தரவுகள் செயல்படுத்தப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள் * கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். * விவசாயிகள், தொழிலாளர்களுக்கு வேலை உறுதி திட்டங்களை வகுத்துள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *