நாகை மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ராதாமங்கலம் ஊராட்சி எறும்புகன்னி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் அங்கு சென்ற போலீசார் எறும்புகன்னி மெயின் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை நடந்ததும், ராதா மங்கலம் எறும்புகன்னி மெயின் ரோட்டை சேர்ந்த புகழேந்திரன் , அதே பகுதியை அருண் ஆகிய 2 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. 2 பேர் கைது இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்த 750 கிராம் கஞ்சாவை கைப்பற்றிய தனிப்படை போலீசார் 2 பேரையும் கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து கீழ்வேளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்திரன், அருண் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 750 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.