அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கா.பெரோஸ்கான் அப்துல்லா அவர்களின் உத்தரவின் பேரில் 05.03.2023 இன்று காவல் அதிகாரிகள், மாவட்டத்தில் உள்ள சிமெண்ட் ஆலைகள், பட்டேல் குரூப், ஹோட்டல்கள், சுங்கச்சாவடி மற்றும் இதர நிறுவனங்களில் பணி புரிகின்ற வட மாநில தொழிலாளர்களிடம் நேரடியாக சென்று கலந்துரையாடி சமூக வலைதளங்களில் பரவிய வதந்தி வீடியோ குறித்தும் மற்றும் அவர்கள் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
அரியலூர் மாவட்டத்தில் 800-க்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
தற்போது வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பரவிய வதந்தியை பார்த்து யாரும்
அச்சப்படத் தேவையில்லை என்றும், அது தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்றும், அரியலூர் மாவட்டத்தை பொருத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தங்கள் பகுதி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட போலீசார் உட்பட, அனைத்து காவல் நிலைய போலீசரும் உங்கள் பாதுகாப்பிற்கு எந்த நேரத்திலும் உள்ளோம்.நீங்கள் அச்சப்பட தேவையில்லை, உங்கள் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் காவல்துறை உள்ளது. மேலும் உங்கள் பணியின் போது விதிமுறைகளின் படி பாதுகாப்பு உபகரணங்களை உபயோகித்து பணிபுரியுமாறும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இதனை அடுத்து வட மாநிலத் தொழிலாளர்கள் அரியலூர் மாவட்டத்தில் தாங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், பணிபுரிகின்ற இடங்களில் எவ்வித இடையூறும் இல்லை என்றும் கூறினார்கள்.