தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் திட்டம் மற்றும் வளரர்ச்சித்துறை சார்பில் நீடித்த வளர்ச்சி இலக்கின் இலச்சினையை வௌியிட்டார். இந்நிகழ்வில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்து றை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் இறையன்பு , திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளர் ராஜசேகரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.