Skip to content
Home » திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

திருவெறும்பூர் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி…..

தமிழகம் முழுவதும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி மார்ச் 4 மற்றும் 5 ஆகிய இரு தேதிகளில் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனவளாகப் பகுதியில் தரைவாழ் பறவைகள் கணக்கெடுப்பு பணியை திருச்சி வன கோட்ட சார்பில் வன காப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு மாவட்ட வன உதவி அலுவலர் சம்பத்குமார் தலைமையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஜனவரி மாதத்தில் நீர் வாழ் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது தற்பொழுது இன்றும், நாளையும் தரைவாழ் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது.

இதில் திருவெறும்பூர் பகுதியில் உள்ள பெல் நிறுவன வளாகம் மற்றும் என்ஐடி, கல்லூரி உள்ளிட்ட கல்லூரி

வளாகங்களில் இந்த கணக்கெடுக்கும்படி நடைபெறுகிறது .

நாளை காப்புக்காடுகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடைபெறும் இந்த கணக்கெடுப்பு பணியின் முக்கிய நோக்கம் பறவைகளின் வாழ்வியல் உணவு மற்றும் அயல் நாட்டு பறவைகள் கணக்கில் எடுக்கப்படும். பறவைகளால் தான் காடுகளின் பரப்பளவு பராமரிக்கப்படுகிறது. அதனால் பறவைகள் கணக்கெடுப்பு மிகவும் முக்கிய பங்கு வைக்கிறது.

இதில் திருச்சி வன கோட்டத்தில் உள்ள களப்பணியாளர்கள், வனசரகர்கள் கோபிநாத், தினேஷ், ரவி மற்றும் இயற்கையால் ஆர்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பறவை ஆராய்ச்சியாளர்கள் இந்த கணக்கெடுப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்,

இதில் பெல் புத்தாயிரம் பூங்கா பகுதியில் எடுக்கப்படும் பறவைகள் கணக்கெடுப்பில் புன் முதுகு மரம் கொத்தி, பச்சை கிளி, தேன் சிட்டு, அரச வாழ், ஈபிடிப்பான், வாழ் காக்கை, மைனா, மணிப்புறா, கொண்டலவாத்தி, மயில், நீலவால் கிச்சன் உள்ளிட்ட பறவைகள் கணக்கு எடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *