திருச்சி நகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் காவிரி பாலம் பழுதடைந்ததால் ராமரிப்பு பணிகளுக்காக ரூபாய் 6.87 கோடி ஒதுக்கப்பட்டு கடந்த மாதம் பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் டூவீலர் முதல் கனரக வாகனங்கள் வரை சென்னை தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தியே நகருக்குள் நுழைய வேண்டிய சூழலுக்கு கட்டாயம் ஏ ற்பட்டதால் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு ஆயிரக்கணக்கான மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இந்நிலையில் முழுமையாக பராமரிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று காலை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு கலந்துகொண்டு பாலத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்வில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார், மத்திய மண்டல ஐஜி கார்த்திகேயன் மாநகர போலீஸ் கமிஷனர் சத்திய பிரியா, எம்எல்ஏக்கள் பழனியாண்டி,சௌந்தரபாண்டியன்,ஸ்டாலின் குமார், மேயர் அன்பழகன்,மாநகராட்சி கமிஷனர் வைத்தியலிங்கம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்