திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், காவல் துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்துசமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.