தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவின் முதல் கூட்டம்முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பலதுறைகளின் செயலாளர்கள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் செயல்திட்டங்கள், பாதிப்புகளை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது, காற்று மாசைக் குறைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது…. ஜி 20 அமைப்புக்கு இந்தியா தலைமேற்றுள்ள நிலையில் இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.
மாணவர்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த காலநிலை அறிவு இயக்கம் விரைவில் தொடங்கப்பட்டும். வளர்ச்சிக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல. வளர்ச்சியும், காலநிலை மாற்றமும் இரு கண்கள் போன்றது. அதற்கேற்ப அரசு செயல்படும். வெப்ப அலைகளையும் கையாள நாம் தயாராக இருக்க வேண்டும். மனிதர்கள் மட்டுமின்றி, பல்வேறு உயிரினங்களுக்கும் காலநிலை மாற்றத்தால் ஆபத்து ஏற்பட்டுள்ளது. வெனிஸ் நகரம் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத வறட்சியை சந்தித்துள்ளது. காலநிலை மாற்றத்தால் பல்வேறு நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. கடல் அரிப்பைத் தடுக்க பனைமரம் நடும் திட்டம் தொடங்கப்படும். காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக அரசு வரும்முன் காக்கும் அரசாக செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.