முதலமைச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் குறித்து நாமக்கல் நகராட்சி அழகு நகர் அரசு தொடக்கப்பள்ளியில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி திடீர் ஆய்வு நடத்தினார். அமைச்சர் திடீரென பள்ளிக்கு வந்ததால் ஆசிரியைகள், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சல்யூட் அடித்து அமைச்சரை மாணவர்கள் வரவேற்றனர்.
பின்னர் குழந்தைகளுடன் அமர்ந்து அமைச்சர் உதயநிதி காலை உணவு சாப்பிட்டார். அருகில் இருந்த மாணவர்களிடம் சாப்பாடு டேஸ்டா இருக்கா? என கேட்டார். நல்லா இருக்கு என குழந்தைகள் கூறினர். பின்னர் வகுப்புக்குள் வந்து மாணவர்களிடம் புத்தகங்களை வாங்கி சில கேள்விகள் கேட்டார். மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பதில் அளித்தனர்.
இந்த ஆய்வு குறித்து அமைச்சர் உதயநிதி கூறியதாவது: ஆய்வின்போது, வகுப்பறைக்கு சென்று அரசின் சொத்தாக திகழும் பள்ளி மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியது மனதிற்கு மகிழ்வைத் தந்தது. அவர்களுக்கு என் அன்பை தெரிவித்து
மகிழ்ந்தேன் என்று கூறினார்.