சமயபுரம் மாரியம்மன் கோவிலில் கடந்த 9 நாட்களில் ரூ1.04கோடி ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி, பக்தர்கள் காணிக்கை.
சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை செலுத்திசெல்கின்றனர்.
அவ்வாறு பக்தர்களால் செலுத்தப்படும் காணிக்கை உண்டியல்களை கோவில் நிர்வாகம் மேற்பார்வையில் மாதம் இருமுறை எண்ணப்பட்டு வருகிறது.
நேற்று சமயபுரம் மாரியம்மன் கோவிலில் காணிக்கை உண்டியல்களை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் வளாகத்தில் உள்ள கோவில் ஊழியர்கள், தன்னார்வலர்கள் என 200க்கும் மேற்பட்டோர் எண்ணின.
இதில் ரூ 1கோடியே 4 லட்சத்து 73ஆயிரத்து 444 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 235ம், அயல்நாட்டு நாணயங்கள் 1,812 காணிக்கையாக பெறப்பட்டன என கோவில் இணை ஆணையர் கல்யாணி தெரிவித்தார்.
கடந்த 9 நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை
ரூ 1கோடியே 4 லட்சத்து 73ஆயிரத்து 444 ரூபாய் ரொக்கம், 2 கிலோ 55 கிராம் தங்கம், 3 கிலோ 80 கிராம் வெள்ளி , அயல்நாட்டு நோட்டுகள் 235ம், அயல்நாட்டு நாணயங்கள் 1,812 காணிக்கையாக பெறப்பட்டுள்ளது.