கடந்த மாதம் 26ம் தேதி, நகைச்சுவை நடிகர் வடிவேலு, இசையமைப்பாளர் தேவா, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட 50 பேருக்கு போலி கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. வழங்கப்பட்ட பட்டங்கள் அனைத்தும் போலியான பட்டங்கள் என பின்னர் தெரியவந்தது.
இதையடுத்து விசாரணையில் ஈடுபட்ட அண்ணாபல்கலைக்கழகம், போலீசாரிடம் புகார் அளித்தது. இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து இந்த அமைப்பின் இயக்குநர் ஹரிஷ் என்பவர் தலைமறைவாகிவிட்டார். அவரது தொலைபேசி எண்ணும் அணைக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.