நாகலாந்து மாநில அரசியல் வரலாற்றில் முதன்முறையாக இரு பெண்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தீமாப்பூர்-3 தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் ஹக்கானி ஜக்காலு தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை 1563 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஜக்காலு வழக்கறிஞர், சமூக ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு அங்காமி தொகுதியில் போட்டியிட்ட என்டிபிபி வேட்பாளர் சல்ஹொடியூனோ குரூஸ் என்ற பெண்ணும் வெற்றி பெற்றார்.
நாகாலாந்து மாநிலம் 1961 டிசம்பர் 1ம் தேதி உதயமானது. 1963 முதல் அங்கு தேர்தல் நடக்கிறது. இதுவரை 14 முறை சட்டமன்ற தேர்தல் நடந்து உள்ளது. இப்போது தான் முதன் முதலாக 2 பெண்கள் அங்கு எம்.எல்.ஏக்களாகி உள்ளனர். நாகாலாந்து மாநிலம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று. இங்கு பழங்குடி மக்கள் அதிகம் வசிக்கிறார்கள்.