ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிமுக வேட்பாளர் தென்னரசை விட சுமார் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் திமுகவைச் சேர்ந்த 11 அமைச்சர்கள் உள்ளிட்டோர் திமுக நிர்வாகிகளுக்கும் பூத்துகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு 22 பூத்துகள் ஒதுக்கப்பட்டன. அந்த வகையில் வீரப்பன் சந்திரம் பகுதி முழுவதிலும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. கடந்த 27ம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது வீரப்பன் சந்திரம் பகுதி வாக்குசாவடிகளில் 16222 வாக்குகள் பதிவாகின. இன்று வாக்கு எண்ணிக்கையின் போது பதிவான 16222 வாக்குகளில் 12020 வாக்குகளை திமுக பெற்றுள்ளது. இங்கு அதிமுகவிற்கு கிடைத்தது வெறும் 2700 வாக்குகள் தான்.. வீரப்பன் சத்திரம் பகுதியில் பதிவான வாக்குகளில் அதிமுக 16.6 சதவீத வாக்குகளை தான் பெற்று இருப்பது என்பது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி எம்எல்ஏ ஆகியோரை சந்தித்து அமைச்சர் செந்தில்பாலாஜி வாழ்த்து பெற்றார்…
Tags:ஈரோடு கிழக்கு