மதுரை-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை 10 அணி அளவில் ஒரு ஈச்சர் லாரி வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது அதே மார்க்கத்தில் இன்னொரு டேங்கர் லாரியும் வேகமாக சென்றது.
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் செட்டியாப்பட்டி மேம்பாலம் அருகே சென்றபோது, ஈச்சர் லாரியை முந்த முயன்ற டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக ஈச்சர் லாரியை இடித்து தள்ளியது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஈச்சர் லாரி சென்டர்மீடியனை கடந்து எதிர்புரம் உள்ள சாலைக்கு சென்று, அந்த வழியாக சென்னையில் இருந்து மதுரை மார்க்கமாக வந்த ஒரு டேங்கர் லாரியுடன் மோதியது. இதில்ஈச்சர் லாரியில் இருந்தவர்களுக்கும், டேங்கர் லாரி டிரைவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தகவல்அறிந்ததும் திருச்சி போக்குவரத்து போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வந்து இடிபாடுகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியதுடன், காயமடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.