தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தர்தலில் திமுக கூட்டணியக்கு மாபெரும் வெற்றியை தந்திருக்கும் மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தேர்தல் பிரசாரத்தின்போது திராவிட மாடல் ஆட்சிக்கு ஆதரவு தாருங்கள் எனறு கேட்டேன். இந்த ஆட்சியை இன்னும் சிறப்போடு நடத்த ஆதரவு வழங்கி உள்ளனர். இந்த தேர்தல் திமுக ஆட்சியை எடைபோட்டு பார்க்கும் எடைத்தேர்தல் . திமுக ஆட்சிக்கு அங்கீகாரம் தாருங்கள், நல்ல தீர்ப்பு தாருங்கள் என்றேன். இந்த தேர்தல் மூலம் மக்கள் ஆட்சியை எடைபோட்டு பார்த்து தீர்ப்பு வழங்கி உள்ளனர்.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரத்தின்போது 4ம் தர பேச்சாளர் போல பேசிய பேச்சுக்கு மக்கள் நல்ல பாடம் வழங்கி உள்ளனர். இந்த தேர்தல் முடிவு வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அச்சாரமாக அமைந்துள்ளது. வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும், இதற்காக உழைத்த அனைவருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த தேர்தல் முடிவு 2024 மக்களவை தேர்தலுக்கு முன்னோட்டம் தான். நான் இப்போதும் தேசிய அரசியலில் தான் இருக்கிறேன். நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் இதுபற்றி பேசி உள்ளேன். பிரதமராக யார் வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பது தான் முக்கியம். இந்த தேர்தல் முடிவு வரும் மக்களவை தேர்தலிலும் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.